உலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியில் தொடரை நடத்தும் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக்கிண்ண வரலாற்றில் தொடரை ஏற்று நடத்தும் நாடு, இதுவரையில் தங்களது முதல் போட்டியில் தோல்விக் கண்டதில்லை. சொந்த அணிகள் விளையாடிய முதல் போட்டிகளில் 6 போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளதுடன், மூன்று போட்டிகளில் வெற்றியில் முடிவடைந்துள்ளது.
ரஷ்யாவை பொருத்தவரையில் ஏற்கனவே பிபா உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் விளையாடியுள்ளது. 1970ம் ஆண்டு மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் போட்டியை நடத்திய மெக்ஸிகோ அணியை ரஷ்யா எதிர்கொண்டது.
இந்த போட்டியில் மெக்ஸிகோ அணியை வெற்றிபெறவில்லை என்பதுடன் போட்டியை ரஷ்ய அணி 0-0 என சமப்படுத்தியிருந்தது.
இம்முறை நடைபெறும் உலகக்கிண்ணத்தை பொருத்தவரையில் ரஷ்ய அணி தங்களை பலமான அணியாக மாற்றிக்கொண்டுள்ளது. இறுதியாக நடைபெற்ற நட்புரீதியான போட்டிகளில், ரஷ்ய அணி தங்களின் ஆட்டத்திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தது. அதுமாத்திரமின்றி தங்களது சொந்த நாட்டில் இன்றைய போட்டியில் விளையாடுவதால், ரஷ்ய அணியின் ஆதிக்கம் சவுதி அணியை விட அதிகமாக இருக்கும்.
இதேவேளை சர்வதேச உதைப்பந்தாட்டத்தை நோக்கும் போது, சவுதி அணி உதைப்பந்தாட்டத்தில் அதிகமான வளர்ச்சியை பெற்று வருவதுடன், கடந்த காலங்களில் சிறந்த அணியாகவும் தங்களை முன்னிறுத்தியுள்ளது.
இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி உதைப்பந்தாட்ட ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய முதல் போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Russia vs Raudi arabia world cup 2018 news Tamil, Russia vs Raudi arabia world cup 2018 news Tamil