{ Narendra Modi Parliament 19 times }
பிரதமர் மோடியின் 4 ஆண்டு ஆட்சிக்காலத்தில் மொத்தம் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இதுவரை பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால், மொத்தம் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதாக கூறப்படுகின்றது.
முக்கியமான விவாதங்கள் நடைபெறும் நாட்களில் அவர் வரவில்லை. இதையடுத்து வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததன் காரணமாகவும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்ததன் காரணமாகவும் அவரால் நாடாளுமன்றத்திற்கு வர இயலவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் நாடாளுமன்றத்தில் அவர் 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார், 5 முறை புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
2 முறை முன்னாள் பிரதமர் நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார், 2 முறை பாகிஸ்தான் குறித்தும், காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சி குறித்தும் பேசியுள்ளார், 4 முறை விவாதங்களில் பேசியுள்ளார்.
இதைதவிர வேறு எதிலும் அவர் பங்கேற்றதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பணமதிப்பிழப்பு,விவசாயிகள் தற்கொலை, வங்கி மோசடிகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போதும் அவர் எதுவும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றம் வந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளிக்குமாறு பிரதமர் மோடிக்கு வலியுறுத்துமாறும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags: Narendra Modi Parliament 19 times
<< மேலதிக இந்திய செய்திகள் >>
*பிரதமர் நரேந்திர மோடியை நெருங்கிவிட்டாரா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி?
*18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு!
*மனைவியின் கற்பை நண்பர்களுக்கு பரிசளித்த கணவன்! (படம் இணைப்பு)
*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்!
*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!
*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி
*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்!
*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்! – கணவர் கண்ணீர்!