யாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) இரவோடிரவாக 15 இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (Valvettithurai suddenly arrested 15 people)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது இரு அணி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிக் குழு மோதலாக வெடித்தது.
இந்தச் சம்பவத்தில் இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறுபேர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுனர்.
இந்நிலையில் கைதான சந்தேகநபர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்றைய தினம்(12) மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
tags :- Valvettithurai suddenly arrested 15 people
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- “மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்
- இலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்!!
- இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்
- பணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்
- தனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை!!
- ‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த
- கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்
- பிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..!!!
- விடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி
- சந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு
- ஆறு பேருக்கு இன்று அமைச்சு பதவி : ரவிக்கும் வழங்கப்படுகின்றதா?
- கோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்