இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்

0
1438
Close Hindu Cultural Center forget Maravanpaluvu Satchidananthan

இலங்கையில் இந்து கலாசார அமைச்சுக்கு இன்று (12) முதலாக இஸ்லாமியரொருவரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். (Close Hindu Cultural Center forget Maravanpaluvu Satchidananthan)

இன்று செவ்வாய்க்கிழமை (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் காதர் மஸ்தானுக்கு இந்து விவகாரப் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விசேடமாகக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய சமயத்தவர்களைக் காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளாதவர், இந்துக்களை இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர், இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலைக் கொடும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சவூதி அரேபிய நாட்டிற்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் இஸ்லாமியப் பள்ளிவாயில்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவர் இந்துக் கலாசார அமைச்சின் மாண்புமிகு துணை அமைச்சர்.

மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருவாரா?

எனவே, இந்து கலாசார அமைச்சுக்குள் புற்றுநோய்க் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவரே இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்.நல்ஆட்சி அரசா? இந்துக்களின் கொல் ஆட்சி அரசா இந்த அரசு? எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

tags :- Close Hindu Cultural Center forget Maravanpaluvu Satchidananthan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites