பணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்

0
1176
50 persons name list arjun aloysius ranjan ramanayake

சர்ச்சைக்குரியப பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் இருந்து காசோலைகளைப் பெற்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.(50 persons name list arjun aloysius ranjan ramanayake)

அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்ற, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 50 உறுப்பினர்களின் பெயர் விபரங்களுடன், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தாம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (10) தாம் ஆணைக்குழுவின் தலைவர் நெவில் குருகேயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும், அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுத்து மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த 50 உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட மறுப்புத் தெரிவித்த பிரதியமைச்சர், எனினும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

tags :- 50 persons name list arjun aloysius ranjan ramanayake
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites