விசுவமடு மக்களின் உணர்ச்சி பெருக்கு : திட்டமிட்ட இராணுவமயமாக்கலுக்கு கிடைத்த வெற்றி!

0
1102
Visuvamadu Civil Security Department Officer Transfer Issue

போருக்கு பின்னராக தமிழ் மக்களின் அரசியல் இயங்கு தளத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ள விடயமாக விசுவமடு பிரதேச மக்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிக்கு இடமாற்றத்தின் போது விடை கொடுத்த காட்சி பதிவுகள் அமைவு பெறுகின்றது. Visuvamadu Civil Security Department Officer Transfer Issue

இந்த விடயத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக பயன் பெற்றுக்கொண்ட மக்களை குறை சொல்வதில் பயன் எதுவுமில்லை.

குறிப்பாக முன்னாள் போராளிகள் போருக்கு பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுக நீரோட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சரியான பொருளாதார வேலைவாய்ப்பு இன்றி அல்லாடிய வேளை இந்த நிலைமையை சரியாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அரசு சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்னும் பெயரில் அவர்களை உள்வாங்கி கொண்டது.

உண்மையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நோக்கம் தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுதல் என்னும் தவறான கண்ணோட்டமே அவர்களின் வெற்றி என்று கூறலாம்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் நடத்தப்படும் முன்பள்ளிகள் மற்றும் பண்ணைகள் இராணுவமயமாக்கலின் முக்கிய துறைகளாக உருவாக்கப்பட்டவையே.

ஒருபுறம் தமிழர் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற கோரும் கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் வேளையில் மறுபுறம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் தனது நிலைபெருகையை விருத்தி செய்து கொண்டுள்ளமை இலங்கை அரசுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.

அந்த வெற்றியின் வெளிப்பாடே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் நன்மை அடைந்த மக்கள் சிந்திய கண்ணீர். நன்மை செய்த ஒருவருக்கு நன்றிக்கடன் செய்தல் என்பது தப்பான விடயம் இல்லை. ஆனால் இந்த விடயத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் மூலம் முன்கொனரப்படும் நன்மைகளின் உண்மை தன்மையை சரியாக விளங்கி கொள்ளவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் நன்மை பெரும் வகையில் சிவில் சமுக செயற்ப்பாடுகளில் இராணுவத்தை முன்னிறுத்தாமல் சிவில் சமுக கட்டமைப்புகளை மக்கள் மயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னிறுத்தப்படாத பட்சத்தில் தமிழர் நிலங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றல் என்பது முடியாத காரியமாகவே இருக்க போகின்றது.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு