ஜூன் 13-ம் திகதி அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதும்போது பந்தைச் சேதப்படுத்தியதால் தடைக்குள்ளான வீரர் டேவிட் வார்னர் வர்ணனையாளராகிறார். Warner New Career
புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், புதிய தலைவர் டிம் பெய்னின் கீழ் முதல் தொடர் நடைபெறுகிறது, இது முதல் புதிய அவுஸ்திரேலிய அணியைப் பார்க்கலாம் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்மித், பேங்கிராப்டுடன் தடைசெய்யப்பட்ட பந்தைச் சேதப்படுத்திய சூத்ரதாரி டேவிட் வார்னர் சேனல் 9-க்காக வர்ணனையாளராகிறார்.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது போட்டியிலிருந்து இவர் வர்ணனை செய்கிறார்.
ஜூன் 16ம் திகதி கார்டிஃபில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
வர்ணனை பணி முடிந்த பிறகு கனடாவில் நடைபெறும் குளோபல் டி20 அணியுடன் இணைகிறார். இது ஜூன் 28-ல் நடைபெறுகிறது.
ஒருவேளை தனது கிரிக்கெட் வாழ்வை முழுமையாக முடித்துக்கொண்டு புதிய ஆரம்பத்தை
வோர்னர் தொடங்குகிறாரோ என்ற ஐயம் அவுஸ்திரேலிய ரசிகர்களிடம் எழுந்துள்ளது.