“ஜனாதிபதி மோசமான சிங்கள பௌத்த பேரினவாதி” – விக்ரமபாகு கருணாரத்ன

0
1203
president worst Sinhala Buddhist chauvinist Vikramabahu Karunaratne

(president worst Sinhala Buddhist chauvinist Vikramabahu Karunaratne)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டில் உள்ளார் எனக் குற்றம்சாட்டியுள்ள நவ சமா ஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, அதனாலேயே தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக தயாரிக்கப்பட்டு வந்த புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டு, நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்பி முன்னேற்றப் பாதையில் நாட்டை இட்டுச் செல்ல வேண்டுமானால், பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கம் துரிதமாக செயற்பட்டு சிங்களஇனவாதக் கும்பல்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

நவ சமசமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்று கொழும்பு மருதானையில் நடைபெற்றது.

ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அறிக்கையிலும் பயங்கரமான முறையில் படுகொலைகளும், காணாமல் ஆக்கப்பட்டவைகளும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து நீதியை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இன்றும் செயற்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகமும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் இறுதித் தீர்மானத்தை எடுத்து கைது செய்து, தண்டனையை வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு இன்று சிங்கள பேரினவாத சக்திகளின் இடையூறுகள் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. சாலியபீரிஸ் அவர்களும் காணாமல் போகவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களே உள்ளனர் என்றும் கூறியுள்ளார். ஆனால் விசாரணை செய்வதற்கும், நீதிபதிகளின் குழுக்களை அமைப்பதற்கும் சாத்தியங்கள் இல்லை என்றுதான் தெரிகிறது.

அதனால் முதலாவதாக சிங்கள இனவாத சக்திகளை அழிப்பதற்காக ஒட்டுமொத்த  சமூகத்தையும் சுத்தப்படுத்துவதற்கான கருத்தாடலை ஆரம்பிக்க வேண்டும். இப்போது பணங்களை விரயம் செய்து அமைப்புக்களை ஏற்படுத்தியும் ஒன்றையும் செய்யமுடியாவிட்டால் அதில் பயனில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

tags :- president worst Sinhala Buddhist chauvinist Vikramabahu Karunaratne
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites