சிறுமிகளுக்கு மதுவை வழங்கி துஷ்பிரயோகம் செய்து வந்த நபர்

0
945
abducted girl found safe bundled car, abducted girl found safe bundled, abducted girl found safe, abducted girl found, girl found safe bundled car, Tamil Netherland news

ஐந்து வருட காலப்பகுதிக்குள் 8 சிறார்களை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய நபரொருவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. children abuse Australia Perth Sentence 

மார்டின் ஜேம்ஸ் கூப்பர் என்ற குறித்த நபர் தனது மனைவியுடன் சேர்ந்து, பராமரிப்பு இல்லமொன்றை நடாத்தி வந்துள்ளார்.

தற்போது 66 வயதான அவர் பேர்த்தில், 1978 முதல் 1983 வரையான காலப்பகுதியிலேயே இந்நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.

அங்கு அவர் வைத்திருந்த மூடிய அறையில் வைத்து சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நான்கு சிறுமிகள் மற்றும் 4 சிறுவர்களை அவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

அவரின் குற்றங்கள் 2015 ஆம் ஆண்டு வெளியுலகிற்கு தெரியவந்தன. 18 ஆண்டுகளை அவர் சிறையில் கழித்தால் அவர் பரோலில் வெளியே வரமுடியும்.

தான் பாதுகாக்க வேண்டிய சிறுவர்களையே சந்தேகநபர் இவ்வாறு செய்துள்ளார். அவரது இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தும் முன்னர் சிறுவர்களுக்கு மதுபானமும், சிகரெட்களும் வழங்கியுள்ளார். அதன் பின்னரே குற்றத்தை புரிந்துள்ளார்.