(tamilnews complaining logathayan north cm wickneshwan)
முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மயமாக்கலால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லை கிராமங்களை நேரில் பார்வையிட சென்ற வட மாகாணசபை உறுப்பினர்கள் குழுவிலும் இடம்பெறாத முதலமைச்சர், சிங்கள குடியேற்றங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் இராணுவத்துடன் இணைந்து மரநடுகை நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகளில் இராணுவம் கலந்து கொள்ளக் கூடாது என கூறிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இராணுவத்துடன் இணைந்து தானும் பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டமை என்ன அடிப்படையில் என யாழ். மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயான் கேள்வி எழுப்பினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து நேற்றய தினம் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்திருந்தனர்.
இந்தநிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இன்று காலை இராணுவத்தினருடன் மரநடுகை நிகழ்வு ஒன்றில் முதலமைச்சர் கலந்து கொண்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மாநகரசபை உறுப்பினர் ந.லோகதயாளன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், முல்லைத்தீவு மாவட்டம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இது இன்று வடமாகாணத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தநிலையில் மாகாணசபை உறுப்பினர்கள் எல்லை கிராமங்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தனர்.
அப்போதும் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்தனர்.
இதன்போதும் முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்,
இராணுவம் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடாது என கூறும் முதலமைச்சர் இராணுவத்தினருடன் இணைந்து மரநடுகை நிகழ்வில் கலந்து கொண்டமை என்ன அடிப்படையில் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
(tamilnews complaining logathayan north cm wickneshwan)
More Tamil News
- கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
- வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் ; தடுத்து நிறுத்த நடவடிக்கை
- வெளிநாட்டிற்கு இலங்கையர்களை அனுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
- பெண்களை அச்சுறுத்தி கொள்ளை; சாவகச்சேரியில் சம்பவம்
- முஸ்லிம் அமைச்சரால் பொங்கியெழுந்த தமிழ் மக்கள்; மட்டக்களப்பில் சர்ச்சை
- ஸ்ரீலங்கன் விமான சேவை மோசடி; விசாரணை ஆரம்பம்
- அர்ஜூன் அலோசியஸிடம் பணம் வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி