Karnataka Coomaraswamy said ready negotiate Tamil Nadu government
காவிரிப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வுகாண தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை நேற்று முன்திம் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள செவ்வியின் போது குமாரசாமி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“கர்நாடகம், தமிழக மக்கள் இணக்கமாக வாழ வேண்டும். கர்நாடக விவசாயிகளின் நலன்கள் காக்கப்பட வேண்டியது எந்தளவு முக்கியமோ அந்த அளவு தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்படவேண்டியதும் அவசியம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரிப் பிரச்சினை உட்பட இரு மாநில மக்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளில் மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் மனோபாவத்துடன் அணுகி தீர்வு கண்டு நல்லுறவை பேணி பாதுகாக்க வேண்டும்” என்று கமல்ஹாசன் வலியுறுத்தினார்.
அவர் கூறியதுபோல இரு மாநிலங்களும் பிரச்னைகளை சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும். இரு மாநில விவசாயிகளின் நலன் மிகவும் முக்கியமாகும். அரசியலமைப்புச்சட்டத்துக்கு உள்பட்டு இரு மாநில விவசாயிகளின் நலனை காப்பது நமது கூட்டுக் கடமையாகும். காவிரிப் பிரச்சினை 100 ஆண்டுகளுக்கும் மேலாகவுள்ளது. சீரான புரிந்துணர்வு மூலம் இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக தமிழக அரசுடன் பேச தயாராக இருக்கிறேன். தமிழகத்துடன் அரசியல் ரீதியாக புதிய அத்தியாயத்தைத் தொடங்கத் தயாராக உள்ளோம் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Karnataka Coomaraswamy said ready negotiate Tamil Nadu government
More Tamil News
- காலா! வருவாரா? மாட்டாரா? – கர்நாடக ரசிகர்கள் கவலை!
- சிறுமியை கடத்த முயற்சி – கட்டி வைத்த உதைத்த பொதுமக்கள்!
- நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி – கீர்த்தனா!
- பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!
- மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?
- காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
- கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!
Tamil News Group websites :