நேற்று, திங்கட்கிழமை மீண்டும் அகதிகள் இரண்டு முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. France refugees evicted
பாரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Canal Saint-Martin பகுதியில் கூடாரங்களில் தங்கியிருந்த அகதிகள் காலை 6.30 மணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதற்கு பின்னர் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Poissonniersக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் இருந்தும் அகதிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் மொத்தமாக 973 அகதிகள் (குழந்தைகள், பெண்கள், ஆண்கள், குடும்பத்தினர் உட்பட) வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட அகதிகளுக்கு தற்காலிகமாக தங்குமிடங்கள் இல்-து-பிரான்சுக்குள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வார புதன்கிழமை 1,017 அகதிகள் மில்லேனியம் முகாமிலிருந்து (18 ஆம் வட்டாரம்) வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!