நடு வீதியில் பலாத்காரம்- பிரான்ஸில் சம்பவம்!

0
699
woman raped rues Palestro et Ponceau road

நேற்று(ஜூன் 3), பரிஸின் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள வீதியில் வைத்து பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். woman raped rues Palestro et Ponceau road

நேற்று அதிகாலை 4 மணி அளவில், rues Palestro et Ponceau இலுள்ள Les Halles கட்டிடத்துக்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவர் தனது நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் அப்பெண்ணை வழிமறித்துள்ளார். பின்னர் அப்பெண்ணை தகாத இடங்களில் எல்லாம் தொட்டு, தள்ளி கீழே வீதியில் விழுத்தி அவர் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.

அதற்கு சற்று நேரத்தின் பின்னர் வீதியில் சென்ற சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதற்குள் குற்றவாளி தப்பிச்சென்றுள்ளார். காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெண்கள் மீதான் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தற்போது பல்வேறு தரப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ள பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், நடுவீதியில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதற்கு பல்வேறு அமைப்புகளால் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**