(Today Horoscope 01-06-2018)
இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 16ம் தேதி,
1.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 1:20 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் அதிகாலை 5:56 வரை;
அதன் பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.
மேஷ ராசி நேயர்களே !
முக்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
ரிஷப ராசி நேயர்களே !
உதவி பெற்றவர் கூட நன்றி மறந்து செயல்படுவர். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.
மிதுனம் ராசி நேயர்களே !
பிறர் கூறும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது.
கடக ராசி நேயர்களே !
நண்பரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பெண்கள் புகுத்த வீட்டினரால் பெரிதும் மதிக்கப்படுவர். அரசு வகையில் நன்மை உண்டு.
சிம்ம ராசி நேயர்களே !
அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெற்று மகிழ்வர். பெண்கள் ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர்.
கன்னி ராசி நேயர்களே !
இனிய பேச்சால் பிறரைக் கவர்ந்திழுப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.
துலாம் ராசி நேயர்களே !
ஒருமுகத் தன்மையுடன் பணியில் ஈடுபடுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சமையைச் சந்தித்தாலும் வருமானம் வந்து சேரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.
விருச்சிகம் ராசி நேயர்களே !
அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்
தனுசு ராசி நேயர்களே !
திட்டமிட்ட பணி விரைவாக நிறைவேறும். தொழிலில் உருவாகிற இடையூறை முறியடிப்பீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.
மகர ராசி நேயர்களே !
வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பிறர் வியக்கும் வகையில் தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.
கும்பம் ராசி நேயர்களே !
வீண் பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பெண்கள் செலவுக்காக கடன் வாங்குவர். உடல்நலனில் அக்கறை தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மீனம் ராசி நேயர்களே !
இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சுதந்திர உணர்வுடன் பணியாற்றுவர். ஆரோக்கியம் பலம் பெறும். பெண்களுக்கு சகோதரவழியில் உதவி கிடைக்கும்.
எமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்
- ஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்
- நீங்கள் பிறந்த கிழமையின் படி செய்ய வேண்டிய பரிகாரங்கள் …..
- நல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து டிப்ஸ்
- வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற உதவும் பரிகாரங்கள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com