எஃகு பொருட்கள் மீது 25% மற்றும் அலுமினிய பொருட்கள் மீது 10% இறக்குமதி வரி இன்று முதல் அமுலுக்கு வருகிறது. macron warn trump related US tariffs
அமெரிக்காவின் இந்த வரிவிதிப்புக்கு “உறுதியான மற்றும் சரிவிகித அளவிலான” நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்படும் என்று டிரம்பிடம் தொலைபேசி மூலம் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறியதாக அவரது அலுவகலகமான எலிசீ மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் மிகவும் முக்கியம் என்றும், சர்வதேச அளவில் அவற்றில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வரிவிதிப்பை டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் நல்ல உறவை உருவாக்கியுள்ள ஜனாதிபதி மக்ரோன், தொலைபேசியில் டிரம்பிடம் பேசினார். உலக வர்த்தக அமைப்பின் விதிகளை வலுப்படுத்த சீனா மற்றும் ஜப்பானுடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்கா பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!