இந்­திய இறை­யாண்­மைக்கு எதி­ராகப் பேசிய வழக்கில் வேல்­மு­ருகன் கைது­!

0
712
Livelihood Party leader Velmurugan arrested case sovereignty country

Livelihood Party leader Velmurugan arrested case sovereignty country

இந்­திய இறை­யாண்­மைக்கு எதி­ராகப் பேசிய வழக்கில், தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சித் தலைவர் வேல்­மு­ருகன் கைது­ செய்­யப்­பட்­டுள்ளார்.

துப்­பாக்கிச் சூட்டில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களைச் சந்­திப்­ப­தற்­காக தமி­ழக வாழ்­வு­ரிமை கட்சித் தலைவர் வேல்­மு­ருகன், கடந்த 25ஆம் திகதி தூத்­துக்­குடி சென்­ற­போது, உளுந்­தூர்­பேட்டை சுங்­கச்­சா­வ­டியை அடித்து நொறுக்­கிய வழக்கில் அவரை தூத்­துக்­குடி விமா­ன­நி­லை­யத்­தி­லேயே வைத்து பொலிஸார் கைது­செய்­தனர். கைது­செய்­யப்­பட்ட அவர், நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு புழல் சிறையில் அடைக்­கப்­பட்டார். பின்னர், சிறு­நீ­ரகப் பாதிப்பு கார­ண­மாக சென்னை ஸ்டான்லி மருத்­து­வ­ம­னையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டார்.

தற்­போது, ஸ்டான்லி மருத்­து­வ­ம­னையில் சிகிச்­சையில்  இருந்­து­வரும் நிலையில், கடலூர் மாவட்ட குறிஞ்­சிப்­பாடி  பொலிஸ் ஆய்­வாளர் ராமதாஸ், வேல்­மு­ருகன் மீது இந்­திய இறை­யாண்­மைக்கு எதி­ராகப் பேசிய வழக்­கையும், தேசத் துரோக வழக்­கையும் பதி­வு­செய்து கைது செய்­துள்ளார்.

காவிரி விவ­காரம் தொடர்­பாக இந்­திய மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு எதி­ரான வேல்­மு­ருகன் பேசி­யதன் அடிப்­ப­டையில், அவர்­மீது மேலும் புதிய வழக்­குகள் பதி­வு­செய்­யப்­படும் என்று தக­வல்கள் வந்­துள்­ளன.

முன்­ன­தாக, வேல்­மு­ரு­கனை மருத்­து­வ­ம­னையில் சந்­தித்து ஆறுதல் கூறி­யி­ருந்த ம.தி.மு.க பொதுச்­செ­ய­லாளர் வைகோ, `வேல்முருகனை குண்டாஸ் சட்டத்தில் கைதுசெய்ய பொலிஸார் திட்டமிடுவதாக எனக்குத் தகவல் வந்துள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

Livelihood Party leader Velmurugan arrested case sovereignty country

More Tamil News

Tamil News Group websites :