(Jaffna Bus Route Drivers Ignore Murikandy Traditional Stop)
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் என்னதான் போர் ஓய்ந்து அமைதி நிலை காணப்பட்டாலும், மறைமுகமாக தமிழ் பாரம்பரியங்களும் இந்து சமய கலாச்சார பண்புகளும் அழிக்கப்பட்டே வருகின்றது.
திடீர் புத்தர் சிலைகள் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் மறுபுறம் இந்து கோவில்கள் நாசகார கும்பல்களால் திட்டமிட்ட முறையில் தகர்க்கப்பட்டு வருகின்றது.
இது ஒருபுறமிருக்க நாமே எமது பாரம்பரியங்களை புறக்கணிப்பு செய்தல் என்பது எதிர்காலத்தில் மாற்று மதத்தினரின் ஆதிக்கம் கையோங்கவே வழி செய்யும். எமது பலவகைப்பட்ட தமிழ் இந்து பாரம்பரியங்கள் எம்மால் கைவிடப்பட்ட நிலையில் அந்த இடங்களை எமது நிலங்களுக்கு சொந்தமில்லாத மதங்கள் நிரப்பிகொண்டது என்னவோ கசப்பான உண்மை தான்.
இது போன்றதொரு நிலைமை கிளிநொச்சியின் முறிகண்டி பகுதியில் ஏற்படும் என பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர்.
முறிகண்டி! வடக்கு பகுதியின் பிரதேசங்களில் பரீட்சையம் இல்லாத நபர்கள் கூட அறிந்து வைத்திருக்கும் முக்கிய கேந்திர நிலையம். வெளி மாவட்டங்களுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பயணம் மேற்கொள்ளும் பிரயாணிகள் எப்போதும் சந்தித்து கொள்ளும் ஒரு மத்திய நிலையம்.
வாகன பயணம் மேற்கொள்பவர்கள் இங்கு தரித்து செல்லுதல் என்பது
காலம் காலமாக பின்பற்றப்பட்டுவரும் ஒரு வழக்கம். இங்குள்ள பிள்ளையார் கோவிலில் தரிசனம் செய்து சிறு ஓய்வுடன் பயணத்தை தொடர்தல் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வருகின்றது. இது பிரயாணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதுடன் உள்ளூர் மக்கள் சிறு விற்பனைகள் மூலம் இலாபமடையகூடிய வகையிலும் அமைந்திருந்தது.
ஆனால் இந்த பாரம்பரிய வழக்கத்துக்கு விரைவில் முடிவு கட்டுவது போல அமைந்துள்ளது பல பஸ் சாரதிகளின் நடவடிக்கை. இங்கு பஸ் வண்டிகள் நிறுத்தப்படும் வழக்கம் குறைவடைந்தே செல்கின்றது.
ஆரம்பத்தில் சில சிங்கள பஸ் சாரதிகளே இவ்வாறு முறிகண்டியில் நிறுத்தாமல் செல்ல தொடங்கினர். ஆனால் தற்போது தமிழ் பேசும் சாரதிகளும் இங்கு பஸ் வண்டிகள் நிறுத்தப்படும் வழக்கத்தை பின்பற்ற விரும்புவதில்லை.
இதன் காரணமாக எப்போதும் களைகட்டியிருக்கும் முறிகண்டி பகுதி சோபை இழந்து வருகின்றது. இதன் மூலம் நமது பாரம்பரிய முறைமை ஒன்றை முடித்து வைக்கும் நடவடிக்கைக்கு நாமே துணை போகின்றோம்.
உண்மையில் இங்கு பத்து நிமிடம் பஸ் வண்டிகளை நிறுத்தி வைப்பது என்பது எந்த விதத்திலும் நேர இழப்பு கிடையாது. சரியான போக்குவரத்து வசதிகள் விருத்தியடையாத காலத்தில் இருந்தே இந்த பாரம்பரியம் நடைமுறையில் உள்ள நிலையில் , தற்காலத்தில் நவீன போக்குவரத்து வசதிகள் , அதிவிரைவு வாகனங்கள் உள்ள நிலையில் நேர இழப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றேயாகும்.
அதுமட்டுமன்றி , பல சிங்கள பிரதேசங்களில் இது போன்ற பாரம்பரிய தரிப்பிடங்கள் இப்போதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் முறிகண்டி விடயத்தில் சிங்கள சாரதிகள் தான்தோன்றி தனமாக நடந்துகொள்வது அவர்களின் பேரினவாத மனநிலையின் வெளிப்பாடாக இருக்கலாம்.
ஆனால் எமது தமிழ் சாரதிகள் இந்த பாரம்பரிய அழிவுக்கு துணை போவது தொடர்பில் எமது சமுகம் விசேட கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் எமது நடைமுறைகளை நாமே அழித்துவிட்டு அந்நிய மதங்களின் ஆக்கிரமிப்பு என கண்ணீர் வடிப்பதில் அர்த்தமே இல்லை.
ஏனைய செய்திகள்
பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!
கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!
முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?
முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!
இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்