நேற்று (மே 30) பாரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் முழுவதிலும் கடும் மழை பெய்தது. இதனால் பாரிஸில் உள்ள பல தொடருந்து நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. France rain weather changes affect traffic
நேற்று 38 மாவட்டங்களுக்கு பிரெஞ்சு வானிலை ஆய்வு நிலையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. பரலவலாக அனைத்து பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பொழிந்திருந்தது.
புதன்கிழமை காலை Vincennes க்கும் Nation க்கும் இடையேயான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அதன் பின்னர், துரிதமாக வெள்ள நீர் அகற்றப்பட்டு 9.30 மணியளவில் மீண்டும் போக்குவரத்து இயங்கியது.
இது தவிர, மேலும் பல மெட்ரோ நிலையங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. நேற்று இரவு தொடர்ச்சியாக பெய்த மழையினால், இன்று காலை மேலும் பல தொடரூந்து நிலையங்களில் சேவைகள் தடைப்பட்டுள்ளன
கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு இதுவரை அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!