மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..!

0
1009
Resistance Modi Malaysian Arrivals, malaysia tamil news, malaysia news, malaysia, Modi,

{ Resistance Modi Malaysian Arrivals }

மலேசியா: நம்பிக்கை கூட்டணி தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீரை சந்திக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர் வரும் வியாழக்கிழமை மலேசியாவிற்கு வருகை மேற்கொள்ளவிருக்கின்றார்.

சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோடி, துன் மகாதீரை சந்திப்பதற்காக மலேசியாவிற்கும் வருகை புரியவிருக்கின்றார்.

பிரதமர் அலுவலகத்தில் இரு நாட்டு பிரதமர்களும் சந்திப்பு நடத்தவிருக்கின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் மோடியின் வருகையை எதிர்ப்பதற்கு மலேசியாவில் உள்ள தமிழ் இயக்கங்கள் தயாராகி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் மோடிக்கு எதிரான கண்டன குரல் வலுக்கின்றது.

தமிழ்நாட்டின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்காத மோடி எதற்கு மலேசியாவிற்கு வர வேண்டுமென சில கூறியுள்ளார்கள். குறிப்பாக, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு முரண்டு பிடிப்பது, கடந்த வாரம் தூத்துகுடியில் 13 பேரை சுட்டுக் கொன்றது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இலங்கை தமிழர்களை கொன்ற மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு வந்த போது, மலேசிய தமிழர்கள் அவருக்கு எதிராக கண்டன குரலை எழுப்பியுள்ளார்கள்.

மலேசியாவிற்கான முன்னாள் இலங்கை தூதர் தாக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மோடி வருகைக்கும் மலேசிய தமிழர்கள் எதிர்ப்பு காட்ட வேண்டுமென வாட்சாப்களில் சில குரல் பதிவை வெளியிட்டுள்ளார்கள். அதை பலர் பகிர்ந்து வருகின்றார்கள். இதனிடையே, நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீருக்கு மரியாதை செலுத்தும் வகையில் யாரும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது என சிலர் கருத்திட்டு வருகின்றார்கள்.

ஆனால், இதுவரையில் எந்த தீர்க்கமான முடிவும் இல்லை. வியாழக்கிழமை திடீரென ஒன்று கூடி மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க சிலர் தயாராகி வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

Tags: Resistance Modi Malaysian Arrivals

<< RELATED MALAYSIA NEWS>>

*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..!

*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்!- கோபிவிகைந்த் அதிரடி அறிவிப்பு!

*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக்  டாக்டர் மகாதீர் உறுதி!

*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்!

*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்!

*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு!

*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா? காரணம் என்ன..?

*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்!

<< RELATED MALAYSIA NEWS>>