இன்று(மே 30) புதன்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் பரிஸ் உட்பட இல்-து-பிரான்ஸ் மாவட்டங்கள் அனைத்திலும் கடும் மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டதுடன், செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை வரை மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. rainy across France- Orange signal
நேற்று காலை முதல் பாரிஸின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவந்த நிலையில், மெற்றோ நிலையங்கள் மற்றும் தொடரூந்து நிலையங்களின் சுரங்கங்களில் மழை நீர் புகுந்தது.
இந்நிலையில், இந்த மழை இன்று பாரிஸ் முழுவதும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு, நாளை காலை 6 மணிவரை இல்-து-பிரான்ஸ் மாநிலத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Paris, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d’Oise, Yvelines, Seine-et-Marne மற்றும் Essonne ஆகிய எட்டு மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்குதலுடன் கூடிய மழை பொழிவு இடம்பெறும். இது தவிர, இன்று மே 30 ஆம் திகதி நாடு முழுவதும் 36 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று பகல், மற்றும் இரவும் மழை பொழிவு ஏற்பட்டிருந்ததும், இதனால் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!