One victims attacked wildlife kovai
கோவை நரசிபுரம் சின்னத்துப்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை அவ்வழியாக சென்ற காட்டுயானைகள் தாக்கின. யானைகள் மிதித்ததில் அந்த நபர் அங்கேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலுவப்பட்டி வனத்துறையினர், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதனைத் தடுக்க இரவு நேரங்களில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
More Tamil News
- ‘பறிபோகும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மாதிரி சட்டப்பேரவை கூட்டம்!
- ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்!
- ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன் – கருணாஸ்!
- பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!
- புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க சாத்தியக் கூறுகள் உள்ளதா?