யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி சொல்லி நிற்கும் எதிர்காலத்துக்கான செய்தி என்ன?

0
911
Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue

(Jaffna Resettled Muslims Breach Ethnic Balancing Issue)

வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் தொடர்ச்சியான சர்ச்சைகள் நிலவி வருகின்றது.

ஒருபுறம் அரபு நாடுகளின் அனுசரணையுடன் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை கையகப்படுத்திவரும் முஸ்லிம் குடியேற்றங்கள் மறுபுறம் இன ரீதியிலான முரண்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் மாட்டிறைச்சி கடைகளை முஸ்லிம் தரப்புகள் அமைப்பது தொடர்பில் இந்து அமைப்புகள் பல போர்க்கொடி தூக்கியுள்ளன.

அதுமட்டுமன்றி பல இடங்களில் சட்டவிரோத மாடு வெட்டும் இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு , அனுமதி வழங்கப்பட்ட வெட்டும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மாடுகள் அறுக்கப்படுவது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

சந்தையில் ஒரு இறைச்சிக்கடைக்கான ஏலம் சாதாரணமாக 40,000 – 50,000 வரையே போகும். ஆனால் முஸ்லீம் அரசியல்வாதிகளின் பினாமிகள் 2 லட்சம் வரை கொடுத்து எடுப்பார்கள். ஒருபோதும் அந்தளவு இலாபத்தை அக்கிராமத்துக்குத் தேவையான இறைச்சியை விற்பதன் மூலம் அடைய முடியாது.

இறைச்சிக்கடை உரிமத்தை வைத்து தேவைக்கு அதிகமான மாடுகளை வெட்டி அவற்றின் இறைச்சியை beef sausage செய்யும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். வவுனியா, கிண்ணியா , கிளிநொச்சி , யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் , சாவகச்சேரி போன்ற கொல்களங்களில் இவ்வாறு தேவைக்கு அதிகமான மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சி சட்டவிரோதமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது

இந்நிலையில் , யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் செறிந்துவாழும் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று பலவிதமான கேள்விகளை எழுப்பிவிட்டுள்ளது.

ஐந்துசந்திப் பகுதியில் தமிழரால் அமைக்கப்படும் நட்சத்திர விடுதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரிசாத் பதியுதீனின் தூண்டுதலில் முஸ்லீம்கள் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இதன் அடிப்படை நியாயப்டுத்தல் என்ன?

இந்த எதிர்ப்புக்கு முஸ்லிம்கள் தெரிவித்திருக்கும் காரணம் முஸ்லிம் மக்கள் செறிந்திருக்கும் பகுதியில் அவர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வண்ணம் நட்சத்திர விடுதிகள் தேவையில்லை என்பது தான்.

இது எந்த விதத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. யாழ்ப்பாணம் என்பது தமிழ் மக்களின் பூர்வீக வாழ்வியல் பிரதேசம். அங்கு தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்து பாரம்பரியம் பெரும்பான்மை மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

மாட்டிறைச்சி பாவனை என்பது அங்கு பாரம்பரிய அடிப்படையில் தவிர்க்கப்பட்ட ஒன்று தான். எனினும் அங்கு மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் தமது வாழ்வாதார தொழிலை முன்னெடுக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சில தரப்புகள் இந்த மாட்டிறைச்சி விற்பனையின் அதி கூடிய பரவலை எதிர்த்து வந்தாலும் , சக இனமொன்றின் வாழ்வாதாரம் என்னும் அடிப்படையில் பலரும் தமது நியாயப்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் மிக சிறிய அளவில் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மை இனமொன்றின் தொழில் நடவடிக்கை தமது கலாச்சாரத்துக்கு குந்தகம் விளைவிக்கின்றது என்னும் எதிர்ப்பு எந்தளவுக்கு இவர்களின் இன நல்லிணக்கம் எதிர்காலத்தில் இருக்கபோகின்றது என்னும் பெருத்த சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது.

என்னதான் சட்டவிரோத குடியேற்றங்கள் பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் , தமிழ் மக்கள் முஸ்லிம்களை அரவணைத்து செல்ல வேண்டிய ஒரு இனமாகவே கருதுகின்றனர்.

ஆனால் இவர்கள் தமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன முறுகல்களை ஏற்படுத்தவும் , தமிழ்மக்களின் பாரம்பரிய நில உரிமையில் கைவைக்கவும் முயலும் பட்சத்தில் தமிழர்கள் இனம் சார்ந்து சிந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படுவதை தவிர்க்கமுடியாது.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு