பம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு

0
693
Haldummulla police said body young man fell dead bambara waterfall

(Haldummulla police said body young man fell dead bambara waterfall)

பம்பரகந்த நீர்வீழ்ச்சியில், நேற்று (29) மாலை வீழ்ந்து உயிரிழந்த இளைஞனின் சடலம், மீட்கப்பட்டதாக, ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காகச் சென்ற சுற்றுலாப் பயணிகளுடன் இருந்த இளைஞனே, திடீரென நீர்வீழ்ச்சியில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரதேசவாசிகளும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.

சடலம், பிரேத பரிசோதனைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த இளைஞன், தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான சனோஜ் மிஹிரங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் பம்பரகந்தை பகுதிக்கு வந்து, நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள மண் பாதையொன்றில் அதனை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் தன்னுடைய அலைபேசி மற்றும் பணப்பை என்பவற்றை வைத்துவிட்டு நீர்வீழ்ச்சியில் குதித்துள்ளார்.

குறித்த இளைஞனது பெற்றோர் மறுமணம் முடித்து வாழ்கின்ற நிலையில், உயிரிழந்த இளைஞர் தனது சசோதர உறவுமுறையான ஒருவருடன் வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

(Haldummulla police said body young man fell dead bambara waterfall)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை