prime minister narendra modi attacked congress party indirectly
உத்தரபிரதேச மாநிலம் பாக்மத் நகரில் பசுமை வழிச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மாநிலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இதுபோன்ற விரைவுச்சாலையை மத்திய அரசு கட்டமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள சாலையே, நாட்டின் முதல் பசுமை வழிச்சாலை என பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், சாதி, மதம் அடிப்படையிலோ, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டோ நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடைபெறும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஒரு குடும்பத்தை ஆராதிப்போர், ஜனநாயகத்தை ஒருபோதும் ஆராதிக்கமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக பிரதமர் மோடி தாக்கி பேசினார்.
More Tamil News
- மக்களிடம் பெரும் வரவேற்பு – நீராவி இன்ஜின் ரயில் பயணம்!
- மாநிலக் கட்சிகள் தான் கிங் – சந்திரபாபு நாயுடு!
- அரசுப் பேருந்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!
- மீண்டும் இணைய சேவை தொடங்கியது!
- உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு!