பிரதமர் தலைமையில் கிளிநொச்சியில் மீளாய்வு கூட்டம்

0
730
Prime Minister Headed Meeting kilinochchi

(Prime Minister Headed Meeting kilinochchi)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை விசேட உலங்கு வானூர்தியில் கிளிநொச்சிக்கு சென்ற நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சல் விஜயகலா மகேஷ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிறிதரன், வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் பிரதேச சபையின் தவிசாளர்கள் திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை