bank account banker without knowing bank
கோவை நீலாம்பூரில் உள்ள கனரா வங்கியின் கிளையில், அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினர், கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்குகளில், திடீர் திடீரென லட்சக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகவும், 2 தினங்களில் அந்த பணம் திரும்ப எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வரவு வைக்கப்பட்ட பணத்திற்கு. வட்டி என்ற பெயரில், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் பணத்தையும் வங்கி நிர்வாகம் எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில், தங்களது கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும், இரு தினங்களில் வட்டியுடன் சேர்த்து, வங்கி நிர்வாகத்தினர் கூடுதலாக பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், மழுப்பலாக பதில் அளிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் கடன் பெற்ற பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது, தொடர்பாக விளக்கம்கேட்டு கடந்த 10ம் தேதி வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதியபோதிலும் இதுவரை இந்த பதிலும் இல்லை என்றும் இது தொடர்பாக ஆர்.பி.ஐ, சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து ஒரு ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்த கோவை கனரா வங்கியின் மண்டல மேலாளர் கணேஷ் ,வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பணப்பரிவர்த்தனை செய்தது, வங்கியின் தவறுதான் எனவும் அவர்களிடம் பிடித்தம் செய்த வட்டித்தொகையக் திரும்ப வழங்கப்படும், என்றும் கூறினார். வங்கி மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
More Tamil News
- சாதனை விளக்க கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்!
- அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
- சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
- பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!
- அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!