(Tamil people condemned Hatton National Bank)
கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கிக்கு எதிராக தமிழர் தாயகத்தில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், ஹற்றன் நஷனல் வங்கியில் உள்ள தமது கணக்குகளை மூடி வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பினை பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் வெளியிட்டதனை அடுத்து, கிளிநொச்சியில் உள்ள ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் வங்கி ஊழியர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
ஹற்றன் நஷனல் வங்கியின் கொழும்புத் தலைமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமது வங்கிக் கணக்குகளையும் மூடி வருகின்றனர்.
தமிழர்களின் பணத்தைச் சுரண்டிக்கொண்டு செல்கின்ற அந்த வங்கி தமிழ் மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்க மறுப்பது தொடர்பாகவும் கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் இருவரையும் மீண்டும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்றும் இல்லை என்றால் அனைத்து தமிழர்களும் தமது கணக்குகளை மூடி வங்கியின் செயற்பாட்டை முடக்குவது எனவும் தமிழ் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்பான செய்தி
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/25/tamil-bank-employees-dismissal/
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- நாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை
- வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Tamil people condemned Hatton National Bank