samayapuram temple taken elephant – pagan poisoning
திருச்சியில் மதம் பிடித்த சமயபுரம் கோவில் யானை பாகனை தூக்கி வீசியும், மிதித்தும் கொன்றது.
திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மசினி எனும் யானை பராமரிக்கப்பட்டு வந்தது. 9 வயதான இந்த பெண் யானை கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை யானையின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றத்தை உணர்ந்த பாகன் கஜேந்திரன் அருகில் சென்று பார்த்தார். அப்போது கரும்பு, கட்டைகள் உள்ளிட்டவற்றை தூக்கி வீசிய யானை ஆவேசமாக பிளிறியது. மேலும் ஆவேச நிலையில் இருந்த யானை, பாகன் கஜேந்திரனை தூக்கி வீசியதுடன் மிதித்துக் கொன்றது.
பாகனை யானை தாக்கியதை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கோவிலில் இருந்த அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டு கோவிலின் 4 வாயில்களும் முடப்பட்டன. இதையடுத்து கோவில் வளாகத்துக்குள் பிளிறியபடி யானை சுற்றிச் சுற்றி ஓடியது.
மேலும் யானையை கட்டுப்படுத்த அருகில் உள்ள மற்ற கோவில் பாகன்களை வரவழைத்து கோவிலுக்கு உள்ளே அனுப்பியுள்ளனர்.
More Tamil News
- 144 தடை உத்தரவு என்றால் என்ன?
- சென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
- 144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது – ஸ்டாலின் கேள்வி!
- துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்!
- கோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்!