பிரான்ஸ், ரஷ்யா இடையே சந்திப்பு!

0
706
France president meet russian president

நேற்று (மே 24) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யாக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். France president meet russian president

இருநாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் Saint Petersburg நகரில் இருவருக்குமிடையேயான சந்திப்பு இடம்பெற உள்ளது. இவர், Saint-Pétersbourgன் சர்வதேச பொருளாதார நிதியம் உடனான சந்திப்பில் கலந்துகொள்கின்றார்.

இது தவிர, ஈரான், ஈராக் அணு ஒப்பந்தம் தொடர்பாகவும் பல முக்கிய முடிவுகளை விளாதிமிர் புட்டினுடன் இணைந்து எடுக்க உள்ளதாக லீசே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் இதுவே அவரின் ரஷ்யாவிற்கான முதல் பயணமாகும். மக்ரோன், தனது மனைவி பிரிஜித் மக்ரோனுடன் பயணமாகியுள்ளார். இதனால் சனிக்கிழமை காலை அவர்கள் மீண்டும் பரிஸுக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**