confidence place Indian State Legislative Assembly while
இந்திய கர்நாடக மாநில சட்டப்பேரவையில் இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
கர்நாடக மாநில நீண்ட இழுபறிக்கு பிறகு குமாரசாமி கடந்த புதன்கிழமை முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து இன்று சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதலில் சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமே~;குமார் தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில், குமாரசாமி தற்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீரமானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவையில் பேசி வருகிறார்.
அதன்படி இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 111 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால், அவருக்கு காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவோடு பெரும்பான்மை தேவைக்கும் மேலான ஆதரவு உள்ளது.
அதுமட்டுமின்றி, குமாரசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சபாநாயகராக இருப்பதால் வாக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட வாய்ப்பிருக்காது.
confidence place Indian State Legislative Assembly while
More Tamil News
- பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!
- குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!
- திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!
- ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
- பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
Tamil News Group websites :