(No Compensation Allowed Facebook Data Leak)
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடி, தேர்தலுக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பும் கேட்டார்.
இதுதொடர்பாக, சமீபத்தில் ஐரோப்பிய சட்ட வல்லுனர்கள் முன்னிலையில், மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்தார்.
அவரது விளக்கத்தில் சட்டவல்லுனர்கள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் சட்டவல்லுனர்களுக்கு இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நம்பிக்கை துரோகம் தான் என்றும், இருப்பினும் வங்கி விவரங்கள் ஏதும் பரிமாறப்படவில்லை என்றும், ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதற்கு இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனவும் தனது அறிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)