(windows 10 twitter pwa gets dark mode improvements latest update)
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மனித செயற்பாடுகளில் இவற்றின் தாக்கமானது அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் உலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ட்விட்டர் முன்னிலையில் திகழ்கின்றது. இதன் காரணமாக மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களை வழங்குவதற்காக அவ்வப்போது தமது செயலியில் சில மாற்றங்களை செய்து வருகின்றது.
தற்போது மக்கள் அதிகம் எதிர்பார்த்து காந்திருந்த ஒரு அம்சத்தினை ட்விட்டர் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. அதன் படி ட்விட்டர் விண்டோஸ், லைட் ஆப் மற்றும் மொபைல் வலைத்தளங்களில் நைட் மோட், ரிட்வீட், லைக் எண்ணிக்கை, ரிப்ளை சார்ந்த அப்டேட் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.
பல்வேறு தளங்களிலும் சீரான சேவையை வழங்கும் நோக்கில் இந்த அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ட்வீட் கம்போஸ் பாக்ஸ் மிக எளிமையாக ட்வீட் மற்றும் டைம்லைன் ஆப்ஷன்களிடையே செல்ல வழி செய்கிறது.
We are rolling out the following features to https://t.co/AIUgyCj4rs, Twitter Lite, and Twitter for Windows to provide more consistency across platforms. See what’s new. ????
✔️ night mode
✔️ real time updates on reply, Retweet, and like counts
✔️ updated Tweet compose box— Twitter (@Twitter) May 22, 2018
Android மற்றும் IOS தளங்களில் ஏற்கனவே கிடைக்கும் நிலையில் மற்ற தளங்களுக்கும் இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்படுகிறது. இந்த மோட் ட்விட்டர் தீம் நிறத்தை இருளிக்கி இரவு நேரங்களில் பயன்படுத்தும் போதும் கண்களுக்கு சோர்வு ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
ட்விட்டர் மொபைல் தளத்தில் ரியல்-டைம் ட்வீட் ரிப்ளைக்கள், ரீட்வீட்கள், லைக் உள்ளிட்டவற்றை பார்க்க அடிக்கடி ரீலோடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. புதிய அப்டேட் மூலம் இந்த நிலை மாற்றப்பட்டு ரீலோடு செய்யாமலேயே ரியல்-டைம் அப்டேட்களை பார்க்க முடியும்.
ட்விட்டரில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் ட்விட்டர் லைட், ட்விட்டர் விண்டோஸ் தளங்களிலும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
OUR GROUP SITES
windows 10 twitter pwa gets dark mode improvements latest update