new fingerprint payment settle methought
கைரேகையை அடிப்படையாகக் கொண்ட கட்டணமுறை அறிமுகம் காணவுள்ளது, சில்லறை வர்த்தகக் கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் இப் புதிய முறையை எதிர்பார்க்கலாம்.
கைவிரல்ரேகை வழி கட்டணம் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட சில்லறை வர்த்தகக் கடையுடன், தனது ரேகைகளை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அதனைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தும் தெரிவை, வாடிக்கையாளர்கள் பெறுவர்.
Touche என்னும் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்நுட்பச் சாதன நிறுவனம், OCBC வங்கியுடன் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கையின் மூலம் அந்தப் புதிய வசதி சாத்தியமாகிறது.
அதோடு, உலகிலேயே விரல் ரேகை மூலம் கடைகளில் பணம் செலுத்தும் முறை அறிமுகமாவது இதுவே முதன்முறை என்று தெரியவந்துள்ளது.
மேலும் , கைரேகை உணர் கருவி தவிர, Touche சாதனத்தில், வழக்கமான முறையில் கட்டணத்தைச் செலுத்துவதற்கான காந்தப் பட்டை வசதியும் இருக்கும், கைரேகையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், கையெழுத்திடவோ, PIN number எனப்படும் இரகசிய எண்ணை அழுத்தவோ தேவையிருக்காது.
மற்றும் , பொருள் வாங்கியதற்கான பற்று சீட்டு , வாடிக்கையாளர்களின் மின்-அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும், நடுத்தர, உயர்தர தொழில் நிறுவனங்களைக் குறிவைத்தே இந்தப் புதிய சேவை அறிமுகம் காண்கிறது. முதலில் உணவு, பானத் துறையில் கவனம் செலுத்தப்படும்.
tags:-new fingerprint payment settle methought
most related Singapore news
ரயில் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்!
களவாடப்பட்ட கடன்பற்று அட்டைகளை பயன்படுத்தி சுற்றுலா செல்ல இணையத்தில் நுழைவுச் சீட்டுகளை வாங்கிய 5 பேருக்குச் சிறை!!
பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த காதல் கடிதம் !!
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கல்லூரி தேர்வுகளும் ரத்து!