(peanut mazala uppam)
தேவையான பொருட்கள் :
தோசை மாவு – 1 கப்
வேர்க்கடலைப் பொடி – தேவையான அளவு
வெங்காயம் – 3
தக்காளி – 3
கொத்தமல்லி – சிறிது
தோல் சீவிய இஞ்சித்துருவல் – 1 டீஸ்பூன்
கரட் துருவல் – 5 டீஸ்பூன்
உப்பு, மற்றும் எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :-
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்ததாக தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.
பிறகு சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் தயார்.
tags:-peanut mazala uppam
<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!