ஆபாச வீடியோக்களால் அபராதம் செலுத்தும் சமூக வலைத்தளங்கள்

0
852
1 lakh fine google facebook yahoo sex abuse videos case

(1 lakh fine google facebook yahoo sex abuse videos case)
சமீப காலமாக Google, Facebook போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும் பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது. ஆபாச வீடியோக்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்யாததால் Google, Facebook, Yahoo உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரஜாவாலா என்ற அறக்கட்டளை நிறுவன், சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்எல் தத்துவுக்கு கடிதம் அனுப்பியது. மேலும், இதற்கு ஆதாரமாக இரண்டு வீடியோக்களையும் காண்பித்தது. பின்னர் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு கடந்த மாதம் 16ம் தேதி நீதிபதிகள் மதன் லோகுர் லலித் ஆகியோர அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இணையத்தில் பரவி வரும் ஆபாச வீடியோக்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாக்கல் செய்யுமாறு அனைத்து சமூகவலைதளங்களுக்கும் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரையில் முன்னணி சமூகவலைதளங்கள் உட்பட எந்த நிறுவனமும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மனுதாக்கல் செய்யாதை கண்டித்த நீதிபதிகள் Google, Yahoo, Google India, Yahoo India, Facebook India, Facebook Ireland, Microsoft, Whatsapp ஆகியவற்றுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

1 lakh fine google facebook yahoo sex abuse videos case