நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் அதிகரிப்பு – அவசர கதவுகள் திறப்பட்டன

0
1190
tamilnews water dams fulfill overflow emergency doors open

(tamilnews water dams fulfill overflow emergency doors open)

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் வௌ்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் வாழ்வோர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்பாசன திணைக்கள அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பி வழிவதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 4 அவசர கதவுகளும் லக்‌ஷபான நீர்த்தேக்கத்தின் 2 அவசர கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அறிவி்க்கப்பட்டுள்ளது.

அதிகளவான மழைவீழ்ச்சியின் காரணமாக பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 7 அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

நிமிடத்திற்கு 23,000 கன அளவான நீர் இதன்மூலம் வெளியேற்றப்படுவதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவசர கதவுகள் திறக்கப்பட்டதால் வெளியேற்றப்படும் விக்டோரிய நீர்தேக்கத்திற்கு அனுப்பப்படுவதாகவும் மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் விக்டோரிய நீர்தேக்கத்தை அண்டிய பகுதியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

(tamilnews water dams fulfill overflow emergency doors open)

More Tamil News

Tamil News Group websites :