இரவு களியாட்டங்களுக்கு எவ்வித தடையுமற்ற ஒரு இடத்தைப் பற்றித் தெரியுமா?
ஸ்பெய்னின் மொலார்கோவுக்கு, கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பது வழமை.
குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் இங்கு படையெடுக்கின்றனர்.
அங்கு தெருக்களில் கும்மாளமடிக்கும் பெண்கள், ஆண்களின் படங்கள் அடுக்கடி இணையத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துவது புதுமையல்ல.
இந்நிலையில், அங்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கான முக்கிய காரணங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதாவது இங்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லையாம். இரவு முழுவதும் குடித்து, கும்மாளமடிக்க தடைகள் இல்லை.
சிறப்பான காலநிலை மற்றும் ஏராளமான மது. அதுமட்டுமின்றி ஆண்கள், பெண்கள் என இலகுவாக ஜோடிகள் அமைகின்றமையும் ஒரு காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.