பயங்கரமான காட்டுக்குள் இரண்டு நாட்கள் தியானம் செய்த முஸ்லிம் பிரஜை

0
1099
Muslim man meditated two days forest

(Muslim man meditated two days forest)
நுவரெலியா ரம்பொடை நீர்வீழ்சியில் காணாமல் போன ஈரான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் குறித்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் தியானத்தில் ஈடுபட்டிருக்கும் போது கொத்மலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஈரான் நாட்டின் டெஹெரானில் வசிக்கும் இந்த நபர் கடந்த 17 ஆம் திகதி ரம்பொடை நகரிலுள்ள வியாபார நிலையத்தில் தனது பயணப் பொதியை வைத்துவிட்டு நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.

இவ்வாறு நீர்வீழ்ச்சிக்குச் சென்றவர் மறுநாள் பகல் வரை திரும்பி வராமையினால் குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளர் குழப்பமடைந்த நிலையில், கொத்மலை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து, கொத்மலை பொலிஸார் மக்கள் சிலருடன் குறித்த சுற்றுலாப் பயணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த சுற்றுலாப் பயணி ரம்பொடை ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பார் என பலர் சந்தேகம் வெளியிட்ட போதிலும் பொலிஸார் காட்டுப் பகுதிக்குள் சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காட்டில் நெடுதூரம் பயணம் செய்த நிலையில், அங்கிருந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் குறித்த சுற்றுலாப்பயணி தியானத்தில் ஈடுபட்டிருந்ததை பொலிஸார் கண்டுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுற்றுலாப் பயணியிடம் பொலிஸார் வினவிய போது, தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்றும் ஆனால் பௌத்த மதத்தை பின்பற்றுவதாகவும், அதனால் தியானத்தில் ஈடுபட இந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

காட்டு விலங்குகள் நடமாடும் மற்றும் மின்சாரம் இல்லாத பகுதியில் கடும் மழைக்கு மத்தியில், நீர் வீழ்ச்சிக்கு அருகில் நீர்வீழ்ச்சியின் ஓசை மாத்திரம் கேட்கும் இடத்தில் தனிமையில் இரவுப் பொழுதைக் கழித்தமை குறித்து மக்கள் வியப்படைந்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Muslim man meditated two days forest