இன்றைய ராசி பலன் 19-05-2018

0
678
Today horoscope 19-05-2018,tamil raasi palan,tamil horoscope,tamil astrology,tamil horoscope,raasi palan,sothidam,daily horoscope

(Today horoscope 19-05-2018)

இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 3ம் தேதி,
19.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 9:37 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 6:03 மணி வரை;
அதன் பின் புனர்பூசம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:16 மணி வரை; சித்த யோகம்

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : மூலம்
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே !
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்ட வர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்த நடந்து கொள்வர்.

மிதுனம் ராசி நேயர்களே !
சுபகாரியங்கள் முடிவாகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே !
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் வந்து உங்களை திக்கு முக்காடச் செய்யும்.

சிம்ம ராசி நேயர்களே !
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

கன்னி ராசி நேயர்களே !
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல் – கொடுக் கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கை கொடுத்துதவுவர். உடல் நலம் சீராகும். கூட்டாளிகளால் லாபம் உண்டு.

துலாம் ராசி நேயர்களே !
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழச்சிகளி லிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். அக்கம் பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
சுப விரயம் ஏற்படும் நாள். சுற்றியிருப்ப வர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலைச்சலுடன் கூடிய ஆதாயம் கிடைக்கும். தொழிலில் பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.

தனுசு ராசி நேயர்களே !
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொது வாழ்வில் புகழ் கூடும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வாகன யோகம் உண்டு.

மகர ராசி நேயர்களே !
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

கும்பம் ராசி நேயர்களே !
லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடுமாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதி கரிக்கும். நூதன பொருட்சேர்க்கை உண்டு.

மீனம் ராசி நேயர்களே !
குழப்பங்கள் தீர கோவில் வழிபாட்டை மேற் கொள்ள வேண்டிய நாள். விரயங்கள் கூடும். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். உத்தியோகத்தில் மேலதி காரிகளால் தொல்லை உண்டு.

மேலும் பல சோதிட தகவல்கள்   

 

Keyword:Today horoscope 19-05-2018