(tamil people killed during war Vasudeva Nanayakkara)
வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொது மக்களும் கொல்லப்பட்டனர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதை பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ராஜித சேனாரத்தன ஒரு பயங்கரவாதி என தெற்கில் இனவாத அரசியல்வாதிகள் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையிலேயே வடக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடவியலாளர் சந்திப்பு கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த புதன்கிழமை(4) இடம்பெற்றபோது,
ஊடகவியலாளர் ஒருவர் ‘மே 18ம் திகதியினை தேசிய இனவழிப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு வட மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனால் , இலங்கையை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட தினமாக நாம் கொண்டாடுகின்றோம் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர்,
மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) அன்று ஆயுதம் ஏந்திய தரப்பினரே. ஆனால் அவர்கள் இன்று உயிரிழந்தவர்களை நினைவு கூரவில்லையா? ஜேவிபினருக்கு இந்த நாட்டில் அதற்கான அனுமதி காணப்படுமாகவிருந்தால் ஏன் தமிழ் மக்களுக்கு அவர்களின் உறவுகளை நினைவு கூர அனுமதி மறுக்கப்படுகிறது.
நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் . உண்மையில் உங்களிடம் தற்பொது எழுந்துள்ள பிரச்சினை நினைவு கூரல் என்பது தொடர்பிலா அல்லது தமிழ் மக்கள் அதனை செய்கின்றனர் என்று பொறுத்துக்கொள்ள முடியாத மனப்பாங்கிலா? இந்த கேள்வியினை கேட்கின்றீர்கள்? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.
மற்றொரு சிங்கள ஊடவியலாளர் அமைச்சரைப் பார்த்து இறுதிக்கட்ட யுத்தத்தில் தீவிரவாதிகளே உயிரிழந்தனர் . பொதுமக்கள் உயிரிழக்கவில்லையே என வினவினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் சர்வதேசம் தன்னிடம் ஒரு கேளிக்கையான கேள்வியொன்றினை முன்வைத்திருந்தது . உங்களைப் போன்ற நபர்கள் இவ்வாறு கேள்வி எழுப்புவதனாலேயே அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அந்த கேள்வி என்ன தெரியுமா? சபையில் எவரேனும் அதனை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? இலங்கை பிரதிநிதிகளே…! ஒரு பொது உயிரேனும் இழக்கப்படாமலா இலங்கை யுத்த வெற்றியை பெற்றது. இந்த கேள்விக்கு சிரிப்பதா அல்லது பதிலளிப்பதா நீங்களே கூறுங்கள் என அமைச்சர் கூறினார்.
அப்படியென்றால் , இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சாதாரண பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்பதனை அரசாங்க தரப்பு பிரதிநிதி என்ற வகையில் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா..? இவ்வாறு மற்றொரு கேள்வி எழுப்ப்பட்டது.
கடும் சினத்துடன் பதிலளித்த ராஜித்த சேனாரத்ன ஏன் உங்களுக்கு தெரியாதா? அல்லது எனக்குதான் தெரியாதா? அனைவரும் அறித்த உண்மையை மீண்டும் கேள்வியாக எழுப்ப வேண்டாம். மனிதாபிமானத்துடன் செயற்பட முயற்சி செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள் எமது மக்களும் அவர்களின் பிள்ளைகளுமே என்றும் அவர்களை நினைவு கூர்வதில் என்ன தவறு இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யார் இவர்கள்? : வடக்கில் புகைப்படம் எடுக்கும் மர்ம நர்கள்
- ‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை
- ‘பாலச்சந்திரன் ஒரு சுட்டிப்பையன்’ – ஒரு போராளி கூறும் உண்மை கதை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்று வந்த உறவுகளுக்கு இராணுவத்தினர் செய்த வேலை
- முள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்!
- அரசாங்க இணையத்தில் பறக்கும் புலிக்கொடி : திக்குமுக்காடும் அரசாங்கம்
- புலிக்கொடியை எரித்து, மிதித்து போர் வெற்றி கொண்டாடிய தென்னிலங்கையினர்
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Time Tamil News Group websites :
Tags:tamil people killed during war Vasudeva Nanayakkara,tamil people killed during war Vasudeva Nanayakkara