மனிதவுரிமை ஆணையாளரின் அறிக்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இல்லை – ஜனாதிபதி

0
660
Sri Lankan security forces not accused war crimes Human Rights

(Sri Lankan security forces not accused war crimes Human Rights)

சில ஊடகங்கள் மற்றும் அமைப்புக்கள் கூறுவது போன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் ​போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த 09 ஆண்டுகளாக இந்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனினும், பலருக்கு பயங்கரவாதிகளையும் இராணுவ வீரர்களையும் பிரித்தறிய தெரியாதிருப்பது குறித்து தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அடிப்படைவாதிகள் வடக்கில் போன்றே தெற்கிலும் இருப்பதாக கூறிய ஜனாதிபதி இவை குறித்து நாம் தௌிவு பெற்று பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

(Sri Lankan security forces not accused war crimes Human Rights)

More Tamil News

Tamil News Group websites :