பிரான்ஸில், IS தாக்குதல் தொடர்பாக இரு பெண்கள் கைது!

0
573
2 women arrested related last week knife attack

கடந்த மே 12 ஆம் திகதி, பரிஸில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மேலும் இரு பெண்கள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது ஐவர் காயமடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நால்வர் காயமடைந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. 2 women arrested related last week knife attack

இதற்கு முன்னதாக பயங்கரவாதி Khamzat Azimov இன் பெற்றோர்களும், அவனுடைய நண்பன் Abdoul Hakim என்பவனும் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் பெற்றோர்கள் மாத்திரம் விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலதிகமாக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், 19 வயதுடைய Ines Hamza ஆவர். இவர் குறித்த பயங்கரவாதியின் மனைவி எனவும், இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரான்ஸை விட்டு வெளியேறி சிரியா செல்ல முற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இரண்டாவது பெண் குறித்த எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

மேலும், குறித்த பயங்கரவாதியால் கொல்லப்பட்ட நபரின் உடலில் மொத்தமாக ஆறு தடவைகள் அவன் கத்தியால் குத்தியுள்ளான் எனவும் இறுதியில் தொண்டையில் கத்தியால் வெட்டியுள்ளான் எனவும் தெரிய வந்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**