கொழும்பில் பலியான இரு பிரித்தானிய வீரர்கள் : ஆட்டோ சாரதி என்ன செய்தார்?, பொலிஸார் வலைவீச்சு

0
1518
three wheeler driver link Two British rugby players die

(three wheeler driver link Two British rugby players die)
நட்புறவு ரக்பி போட்டியில் பங்கேற்பதற்காக, இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய ரக்பி குழுவைச் சேர்ந்த இரு வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சி.சி.டி.வி காணொளிகளை ஆதாரமாக வைத்து குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த முச்சக்வண்டி சாரதியே குறித்த வீரர்களுக்கு கொக்கேயின் போதைப்பொருளை வாங்கி கொடுத்துள்ளதாகவும் இதனாலேயே குறித்த வீரர்கள் மூச்சு திணறி உயிரிழந்தமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 10 ஆம் திகதியன்று 22 பேர் உள்ளடங்கலாக இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய ரக்பி ​அணியினர், கொழும்பு – கோட்டையிலுள்ள விடுதியியொன்றில் தங்கவைக்கப்பட்டனர்.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பிலுள்ள மைதானமொன்றில் நட்புறவு ரக்பி போட்டியொன்றும் இடம்பெற்றது.
அன்றைய தினம் இரவு வேளையில் விருந்துபசார நிகழ்வொன்றும் இடம்பெற்ற நிலையில், குறித்த அணியில் இரு வீரர்களும் மறுநாள் (13) அதிகாலை 4 மணியளவிலேயே விடுதிக்கு திரும்பியுள்ளனர்.

விடுதிக்கு வரும் வழியில் முச்சக்கர வண்டி சாரதி குறித்த இரு வீரர்களுக்கும் கொக்கேயின் போதைப் பொருளை வாங்கி கொடுத்துள்ளார்.

ஏற்கனே மது போதையில் இருந்த வீரர்கள், கொக்கேயின் போதைப் பொருளை பாவித்த பின்னர் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 1 ஆம் திகதி காலை 10 மணியளவில் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்ததோடு மற்றைய நபர் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :