மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

0
847
Ready stay country respect ban imposed, malaysia tamil news, malaysia 14 election, malaysia election, malaysia,

{ Ready stay country respect ban imposed }

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் அவருடைய மனைவிக்கும் மலேசியாவைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள திரு. நஜிப், தாமும் தமது குடும்பத்தாரும் இன்று (மே 12) தொடங்கி அடுத்தவாரம் வரை வெளிநாட்டுக்கு ஓய்வுக்காகச் செல்வதாகக் கூறியிருந்தார்.

ஆனால், குடிநுழைவுத் துறை அதிகாரிகள், தாமும் தமது குடும்பத்தாரும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாக நஜிப் கூறியுள்ளார்.

அந்த உத்தரவை மதித்துத் தாமும் தமது குடும்பத்தாரும் மலேசியாவிலேயே தங்கியிருக்கத் தயாராய் இருப்பதாக அவர் Twitter-இல் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, கோலாலம்பூரிலுள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா (Sultan Abdul Aziz Shah) விமான நிலையத்திலிருந்து, காலை 10 மணியளவில் தனியார் விமானம் ஒன்று ஜக்கர்த்தா செல்லவிருந்ததாகத் தகவல் வெளியானது.

அந்த விமானத்தில்தான் திரு. நஜிப் தமது மனைவியோடு பயணம் செய்யவிருந்தார் என நம்பப்படுகின்றது.

ஆனால் அவர்களது பயணத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், சுமார் 100 பேர் விமான நிலையத்திற்கு வெளியே திரண்டதை அடுத்து, திரு. நஜிப்பின் பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.

அவ்வாறு திரண்டிருந்த மக்கள், அங்கு வந்துகொண்டிருந்த வாகனங்கள் அனைத்தையும் சோதனையிட முற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டிய கட்டாயத்தின் பேரில், பொதுமக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் நிலையைத் தவிர்க்கவேண்டி, அண்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Tags: Ready stay country respect ban imposed

<< RELATED MALAYSIA NEWS>>

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

<<Tamil News Groups Websites>>