{ Dutoshree Chubra withdraws politics }
மலேசியா, பொதுத்தேர்தலில் கண்ட அதிர்ச்சித் தோல்வியால் அரசியலில் இருந்து விலகுவதாக மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
தோல் சிகிச்சை நிபுணரான அவர், மீண்டும் மருத்துவத் துறைக்கே செல்லக்கூடுமென, ‘தி ஸ்டார்’ செய்தி கூறியுள்ளது.
“ஒரு முடிவில் தான் எதுவும் ஆரம்பமாகும். அதனால், இதுவே என் இறுதி தவணையாக இருக்கக்கூடும் என நான் நினைக்கின்றேன். எனது இந்த வயதில் இனி அரசியலில் ஈடுபட நான் விரும்பவில்லை. எனது அரசியல் பயணம் மிக விரைவிலேயே விளிம்பிற்கு வந்துவிட்டதை தேர்தல் முடிவு காண்பித்து விட்டது” என டத்தோ சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று தவணைகளாக சிகாமட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ சுப்ரா, இம்முறை பி.கே.ஆரின் எட்மண்ட் சந்தாராவிடம் 5,476 வாக்குகள் வித்தியாசத்தில் அத்தொகுதியை இழந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தான் செய்த சேவைகளுக்கு அப்பால், வேறு எதையோ சிகாமட் வாக்காளர்கள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
தான் செய்த சேவைகள் அடிப்படையில் சிகாமட் மக்கள் வாக்களித்து இருந்தால், நிச்சயம் தமக்குத்தான் வாக்களித்து இருப்பார்கள் என அவர் விவரித்துள்ளார். இதனிடையே, ஒட்டுமொத்த தே.மு. உருமாற்றம் செய்யப்பட வேண்டுமென டாக்டர் சுப்ரா கூறியுள்ளார்.
Tags: Dutoshree Chubra withdraws politics
<< TODAY MALAYSIA NEWS>>
*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!
*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!
*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!
*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?
*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!
*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!
*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!
*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!
<<Tamil News Groups Websites>>