(whatsapp users beware messages can crash app)
மின் சாதனங்களைப் பாதிக்கும் புதிய புதிய வைரஸ்கள் அவ்வப்போது பரவி உலகையே பயமுறுத்தி வரும் நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் மெசேஜ் வடிவிலேயே வந்து ஆபத்தை ஏற்படுத்துகிறது ஒரு வைரஸ்.
“This is very interesting (emoji)…Read more” என்று தொடங்கும் அந்த வைரஸ் மெசேஜ் ஏராளமனா எமோஜிக்களைக் கொண்டிருக்கும். யாரிடமிருந்தாவது அந்த மெசேஜ் வந்தால் அதை திறக்காமல் அப்படியே டெலிட் செய்துவிடுவதுதான் ஒரே பாதுகாப்பு வழி.
திறந்தால் என்ன ஆகும்? உங்கள் மொபைல் உடனே ஹேங் ஆகும். சிறிது நேரத்திலேயே சுவிட்ச் ஆப் ஆகிவிடும். இந்த ஆபத்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் ஆகிய இரு விதமான மொபைல்களிலும் உள்ளதாம்.
வாட்ஸ் அப்பில் இப்படி நடப்பது புதிதல்ல. ஏற்கெனவே, திடீரென ஏற்பட்ட கோளாறு ஒன்றினால் ஒரு மெசேஜ் அனுப்பிய/வந்த நேரத்தைக் காட்டுவதில் (timestamps) பிரச்னை வந்தது. TODAY என்பதற்குப் பதிலாக 89ODAY என்று காட்டியது. YESTERDAY என்பதற்குப் பதிலாக 89ESTERDAY என்று காட்டியது. பின் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது.
OUR GROUP SITES