போராடி வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் முகுருஷா!

0
650
Madrid Open 2018 Garbine Muguruza news Tamil

(Madrid Open 2018 Garbine Muguruza news Tamil)

ஸ்பெயில் நடைபெற்று வரும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுட்டில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஷா வெற்றிபெற்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சீன வீராங்கனை பீங்கை வீழ்த்திய முகுருஷா, இன்று நடைபெற்ற போட்டியில் குரோடிய வீராங்கனை டோனா வெகிச்சை எதிர்கொண்டு விளையாடினார்.

போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கத்தை செலுத்திய வெகிச், பின்னர் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 1-2 என என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

முதல் செட்டில் அபாரமாக ஆடிய வெகிச் 6-2 என செட்டை கைப்பற்றிய நிலையில், அடுத்த இரண்டு செட்களிலும் முகுருஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன்படி முகுருஷா இரண்டாவது செட்டை 6-4 எனவும், மூன்றாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முகுருஷா அடுத்த சுற்றில் ரஷ்ய வீராங்கனை டரியா கசட்கினாவை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>