(nokia 7 plus soon dual volte support news)
HMD Global நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் VoLTE வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை HMD Global நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டர் மூலம் உறுதி செய்திருக்கிறார். இரண்டாம் சிம் விரைவில் டூயல்-வோல்ட்இ வசதியை பெறும் (Second-SIM will get dual-VoLTE shortly) என தனது ட்விட்-இல் அவர் குறிப்பிட்டிருந்தார்.புதிய நோக்கியா 7 பிளஸ் அதன் தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்களுக்கு அதிக பாராட்டைப் பெற்றாலும் கூட இரண்டாவது சிம் ஸ்லாட்டில் VoLTE வசதி வழங்கப்படாதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்யும் விதமாகவே தற்போது இந்த புதிய அப்டேட் வழங்கப்படுகிறது.
நோக்கியா 7 பிளஸ் சிறப்பம்சங்கள்:
– 6.0 இன்ச் 2160×1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 GB Ram
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் Dual Sim Slot
– 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4G VoLTE, Wifi, Blutooth
– 3800mah பேட்டரி, Fast Charging
OUR GROUP SITES