Maryland Shooting
வொஷிங்டனுக்கு அருகே மேரிலாண்ட் வட்டாரப் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஸ்னைடர் என்ற 41 வயது நபரே, ஏனையோரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிய கிறிஸ்டோபரின் மனைவி, இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தன்னை தனது கணவர் சில நாட்களாக வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும், அதிலிருந்து தப்பியதான் அருகிலிருந்த வீட்டுக்கு ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு வந்த தனது கணவன், அவ்வீட்டில் இருந்தோரை சுட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவர் பண்ணை வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அங்கு வந்த
பொலிஸார் அவருடன் தொடர்பை ஏற்படுத்தி வெளியே வந்து சரணடையும் படி சொல்லியுள்ளனர்.
எனினும் அவர் வெளியே வராமையால், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதன்போது அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.