நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!

0
987
Singapore airline stop road

(Singapore airline stop road)

சிங்கப்பூரிலிருந்து கொல்கத்தா சென்ற SQ516 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்குள்ள ஓடுபாதையில் நின்றுவிட்டது.

இவ்  விமானம்,  சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு பத்தரை மணிக்குக் கொல்கத்தாவில் தரையிறங்கியது.

சுமார் 20 நிமிடங்கள் அந்த விமானம் ஓடுபாதையிலேயே நின்றது.விரைந்து வந்த தொழில்நுட்பக் குழு விமானத்தை இழுத்துச் சென்று அதற்குரிய இடத்தில் நிறுத்தியது.

மேலும் ,பயணிகள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

மற்றும் , விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு அந்த விமானம் நேற்று மீண்டும் சிங்கப்பூர் திரும்பியதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ,தெரிவித்துள்ளது.

tags:-  Singapore airline stop road

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**